சேலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. இந்த மழை சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. தொடர்ந்து மழை தூறிக் கொண்டே இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் சேலம் மெயின்ரோட்டில் மிதிலா பஸ் நிறுத்தம் பகுதியில் நின்ற பழமையான பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் நடுவில் விழுந்தது. அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மரம் விழுந்த தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கீழே விழுந்த மரத்தை சிறிது, சிறிதாக வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சம்பவ இடத்தில் நேற்று இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.