நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-21 18:30 GMT

தஞ்சாவூரில் இருந்து நாமக்கலுக்கு அளவுக்கு அதிகமாக நெல்மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி கரூர் மாவட்டம் பாலத்துறையில் இருந்து தவிட்டுப்பாளையம் வழியாக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் சென்றபோது திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு பரமத்தி வேலூருக்கு மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக சென்று விட்டார். இதனால் கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்