சென்னிமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்- வேறு இடத்தில் நட கோரிக்கை

சென்னிமலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்- வேறு இடத்தில் நட கோரிக்கை

Update: 2022-09-15 21:30 GMT

சென்னிமலை

சென்னிமலை பேரூராட்சியில் உள்ள ஈங்கூர் ரோடு 2-வது வார்டுக்கு உட்பட்டது பட்டேல் வீதி. இந்த பகுதியில் செல்லும் தார் ரோட்டின் ஓரத்தில் மின்கம்பம் உள்ளது. தார் ரோட்டின் ஓரப்பகுதியில் இந்த மின் கம்பம் உள்ளதால் அந்த வழியே போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'தார் ரோட்டிலேயே மின்கம்பம் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கம்பம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக பள்ளிக்கூட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. தனியார் மருத்துவமனைக்கு பலர் இந்த வழியாகதான் சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் ரோட்டில் உள்ள மின் கம்பத்தை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வேறு இடத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்