பாரம்பரிய நடவாவி திருவிழா
நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.;
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி நடவாவி திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பூமிக்கு அடியில் தனித்துவமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடவாவி கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.