தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கலை விழா

தொல்லியல் துறை சார்பில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கலைவிழா நடந்தது. இதை திரளான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

Update: 2023-01-16 18:45 GMT

பொறையாறு:

தொல்லியல் துறை சார்பில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கலைவிழா நடந்தது. இதை திரளான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

பாரம்பரிய கலைவிழா

பாரம்பரிய, மரபு மற்றும் கிராமியக் கலைகளை வம்சாவழியாக நடத்திவரும் கலைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், பாரம்பரிய கலைகளின் சிறப்பை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கிலும் கலை விழாக்களை தரங்கம்பாடி, தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில், மக்கள் அதிகமாக கூடும் நாட்களில் நடத்த அரசு உத்தரவிட்டது.

டேனிஷ்கோட்டை

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழா, பாரம்பரிய, கிராமிய மரபு சார் கலை விழா நேற்று தொடங்கியது.

இந்த விழா இன்று(செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.முதல்நாள் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரபு வழி கலைஞர்கள் கலந்து கொண்டு கட்டைகால் ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், சிவசக்தி காளியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்

இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். மேலும் கிராமியக் கலைஞர்களுடன் ஏராளமானோர் தங்கள் செல்போனில் போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்