விபத்தில் வியாபாரி சாவு

நரிக்குடி அருகே விபத்தில் வியாபாரி பலியானார்.

Update: 2023-04-23 18:52 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே உள்ள கீழ இடையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 52). கோழி வியாபாரியான இவர் வியாபாரம் செய்ய கோழிகளை வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஊரிலிருந்து நரிக்குடி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முனியாண்டி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்