வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-12-12 18:45 GMT

கோவை,

கோவை சாய்பாபா காலனி அழகன்னன் வீதி பகுதியை சேர்ந்த வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் ஆனந்தகுமார் (35) வியாபாரி. இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியே வசித்து வந்தனர்.

தொழில் சம்பந்தமாக அடிக்கடி ஆனந்தகுமார் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம். மேலும் ஆனந்த குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் மனைவி பிரிந்து சென்றதில் இருந்து ஆனந்தகுமார் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது குடும்பத்தார் வந்து பார்த்தபோது ஆனந்தகுமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்