வீட்டில் 2 டன் ரேசன் அரிசியை பதுக்கிய வியாபாரி கைது
கோவில்பட்டியில் வீட்டில் 2 டன் ரேசன் அரிசியை பதுக்கிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி, கடத்தி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை தொடர்ந்து கோவில்பட்டி போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி லாயல் மில் காலனியில் ொரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாதவ ராஜா மற்றும் போலீசார் லாயல் மில் காலனியிலுள்ள வீரபுத்திரன் மகன் மாரிமுத்து(வயது42) என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் ெசய்தனர்.
விசாரணையில், வியாபாரியான மாரிமுத்து ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கிழக்கு போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.