ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-05 18:20 GMT

பெரம்பலூரில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யூ.) பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை மிக துரிதமாக சரி செய்ய வேண்டும். நலவாரிய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து நலவாரிய மனுக்களை சமர்ப்பிக்க ஆப்லைன் முறையில் அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான கேட்பு மனுக்களை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நலத்திட்ட பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவைத்தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் அகஸ்டின், ரெங்கநாதன், சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில உதவி தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஆட்டோ சங்கம், கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம், சாலையோர வியாபாரிகள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்