தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-05 19:01 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அரியலூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், துணை செயலாளர் கிருஷ்ணன், துணை தலைவர் சந்தானம் மற்றும் கட்டுமான சங்க தலைவர்கள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, ஆரோக்கியநாதன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்