வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்குவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வேளாங்கண்ணி:
மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்குவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின்"லூர்து நகர்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த பேராலயம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு.
ஆண்டு திருவிழா
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறு வருவது வழக்கம்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளானோர் வருவார்கள்.
குவியும் சுற்றுலா பயணிகள்
அதன்படி தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கின்றனர். விழாவைமுன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கின்றனர்.