புளியஞ்சோலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலைக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், குழந்தைகளுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். அய்யாற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், நாட்டாமடுவிலும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை அனுமதிக்காதது அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கழிப்பிட வசதி, உடைமாற்றும் அறை, குடிநீர் வசதியில்லாததால் சுற்றுலா பயணிகள், குறிப்பாக பெண்கள் சிரமம் அடைந்தனர். அய்யாற்றில் நீராடி, அடர்ந்த வனப்பகுதியில் இளைப்பாறும் வகையில் உள்ள இந்த சுற்றுலா தலத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளதாகவும், அதனை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.