குற்றாலம் அருவிகளில் வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்று குளித்து சென்றனர்.

Update: 2023-08-02 19:00 GMT

நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்து நின்று குளித்து சென்றனர்.

தாமதமாக தொடங்கிய சீசன்

குற்றாலத்தில் இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. ஒரு மாதம் தாமதமாக தொடங்கி இருந்தாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. இடையிடையே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. எனினும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருந்தது.

நீர்வரத்து குறைந்தது

நேற்று குற்றாலம் பகுதியில் வெயில் அடித்தது. பலத்த காற்று வீசியது. ஆனால் மழை இல்லாத காரணத்தால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து குளித்தனர். இதேபோல் ஐந்தருவியில் 4 கிளைகளில் மட்டும் தண்ணீர் சுமாராக விழுந்தது. அதிலும் வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சாரல் மழை பெய்தால் தான் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்