கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. தற்போது கோடை வெயில் வாட்டி வருவதாலும், கோடை விடுமுறை காரணமாகவும் கொடிவேரி அணையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.