திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

விடுமுறை நாளான இன்று திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update: 2022-09-11 10:48 GMT

திருவட்டார்,

குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைந்ததால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று விடுமுறை தினம் என்பதால் திற்பரப்பு அருவிக்கு காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது.

இதனால் அருவி ஜங்ஷனில் இருந்து நீண்ட வரிசையில் சுற்றுல வாகனங்கள் வரிசையாக நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் திற்பரப்பு தடுப்பணைபகுதியில் சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்