கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-12-26 18:45 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்்து நீர்வரத்து ஏற்படும். தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அருவியில் குடும்பத்துடன் உற்சாகமாய் குளித்து செல்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்