சுற்றுலா பயணிகள் குதூகல குளியல்

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்

Update: 2022-09-18 18:45 GMT

குற்றாலத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் சீசன் தொடங்கியது. ஆகஸ்டு மாதம் வரை சீசன் நன்றாக இருந்தது. தற்போது சீசன் முடிந்த பிறகும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து அருவிகளில் குளித்து மகிழ்கிறார்கள்.

நேற்று குற்றாலத்தில் வெயில் சுட்டெரித்தாலும், காற்று அதிகமாக வீசியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்