பராமரிப்பு பணி:அகஸ்தியர் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பராமரிப்பு பணி காரணமாக அகஸ்தியர் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.;

Update:2023-02-14 03:23 IST

விக்கிரமசிங்கபுரம்:

களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டிற்கான வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 8-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

இந்தநிலையில் அகஸ்தியர் அருவி பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் வனத்துறை மறு அறிவிப்பு அறிவிக்கும் வரை அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தொடர் தடை விதித்துள்ளது என அம்பை துணை இயக்குனர் செண்பகபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்