குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
'தென்னகத்தின் ஸ்பா' என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.
இந்த நிலையில் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றால பிரதான அருவி ,மெயின் அருவி,ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.