பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்; இரவிலும் அனுமதிக்க கோரிக்கை

பழைய குற்றாலம் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர். தொடர்ந்து இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-05 12:05 GMT

பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்துச் சென்றனர். தொடர்ந்து இரவிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய குற்றாலம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று குறைவாக விழுகிறது. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்குள்ள பாதுகாப்பு வளைவின் மீது ஏறி நின்று குளிக்கின்றனர். அங்கும் இங்கும் நடந்து செல்கின்றனர். அங்கு பாதுகாப்பு நிற்கும் போலீசார் எச்சரித்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் பாதுகாப்பு வளைவின் மீது ஏறி குளிக்கின்றனர். கால் தவறினால் தடாகத்தில் விழவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இரவிலும் குளிக்க அனுமதிக்க கோரிக்கை

பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியவர்கள் அருவிக்கு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே இங்கும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்தவர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்