கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் சமவெளியில் இருந்து மலைப்பாதைக்கு வரும்போது விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சுற்றுலா வேன் ஒன்று கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.
இதை கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன டிரைவர்கள் ஓடி வந்து வேனை தடுத்து நிறுத்த முயன்றனர். தொடர்ந்து டயர்களுக்கு அடியில் கற்களை போட்டனர். பின்னர் பல்வேறு முயற்சிக்கு பிறகு வேன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.