டிரோன் கேமரா பறக்க விட்ட சுற்றுலா பயணிக்கு அபராதம்

வால்பாறையில் அனுமதியின்றி டிரோன் கேமரா பறக்க விட்ட சுற்றுலா பயணிக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-01-17 18:45 GMT

வால்பாறையில் அனுமதியின்றி டிரோன் கேமரா பறக்க விட்ட சுற்றுலா பயணிக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தீவிர ரோந்து

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை வனப் பகுதி மற்றும் தேயிலை தோட்ட பகுதிகளில் டிரோன் கேமரா பறக்க வனத் துறையினர் தடை விதித்து உள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆனை மலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்கவா தேஜா உத்தரவின் பேரில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண் டன் தலைமையில் சிறப்பு வனக்குழுவினர் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டிரோன் கேமரா

அப்போது தாய்முடி எஸ்டேட் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று திடீரென்று பறப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடனே சிறப்பு வனக்குழுவினர் தாய்முடி எஸ்டேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு அனுமதியின்றி அனுமதியின்றி டிரோன் கேமராவை பறக்க விட்டது சென்னை அம்பத்தூரை சேர்ந்த சுற்றுலா பயணி கென்னிஜாக்சன் (42) என்பது தெரிய வந்தது. உடனே அந்த டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.

அபராதம்

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அனுமதி யின்றி டிரோன் கேமராவை பறக்க விட்டதற்காக வனத்துறை சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வட்டார வனப்பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியில் டிரோன் கேமரா பறக்க விடக் கூடாது. மீறினால் சட்டரீதியாக நடவடிக் கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்