சிவகாசியில் சாரல் மழை
சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டையில் சாரல் மழை பெய்தது.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த 1 வாரமாக மாலை நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.