குமரி அணைப்பகுதிகளில் சாரல் மழை
குமரி அணைப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது.;
குலசேகரம்:
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர் சாரல் மழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துக் காணப்பட்டது. இதே போன்று குலசேகரம், திருவட்டார், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு, பாலமோர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. மேலும் பாசனப் பகுதிகளிலும் சாரல் மழை நீடித்ததால் பெருஞ்சாணி அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 50 கன அடியாக குறைக்கப்பட்டது.