அணைப்பகுதிகளில் சாரல் மழை

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் சாரல் மழை;

Update:2023-04-16 01:47 IST

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிமாக உள்ளது.

இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மலையோரப் பகுதிகளில் சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று பிற்பகலில் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதேபோல் பொன்மனை, குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக இந்த பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்