இடையன்குடியில் தீப்பந்த ஊர்வலம்
இடையன்குடியில் தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது.
திசையன்விளை:
இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் வாழ்ந்த காலத்தில் காலரா நோய் அதிகமாக இருந்துள்ளது. அப்போது அவர் தீப்பந்தம் ஏந்தி வீடுவீடாக சென்று பிராத்தனை (ஜெபம்) செய்துள்ளார். அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பெரிய வெள்ளியன்று இடையன்குடியில் தீப்பந்த ஊர்வலம் நடைபெறும். அதன்படி நேற்று இரவு இடையன்குடி சேகரகுரு பர்ணபாஸ் தலைமையில் தூய திருத்துவ ஆலயத்தில் இருந்து தீப்பந்த ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் வழிநெடுகிலும் தீப்பந்தத்திற்கு எண்ணெய் ஊற்றி நேர்சைக் கடன் செலுத்தினர். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு ஜெபம் செய்தனர்.