தோப்புமலை கருப்பசாமி கோவிலுக்குசொந்தமான இடங்களில் அளவீடும் பணி
வீரபாண்டி அருகே தோப்புமலை கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் அளவீடும் பணி நடந்தது.;
தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி, வீரபாண்டி அருகே உப்பார்பட்டி வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள தோப்புமலை கருப்பசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் தேனி மாவட்ட தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்), கோவில் செயல் அலுவலர் ஆகியோா் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து இந்து சமய அறநிலையத் துறை குறியீடு பொறிக்கப்பட்ட எல்லை கற்களை நட்டனர்.