திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு ஊத்துக்குளி, பல்லடம், பொங்கலூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. கடந்த மாதம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800 வரை விற்பனையானது. விளைச்சல் குறைவால் இந்த விலையேற்றம் ஏற்பட்டது. தக்காளி கிடைப்பதில் பற்றாக்குறையும் ஏற்பட்டது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக தக்காளி விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தேக்கமில்லாமல் தக்காளிகள் விற்பனையாகி வருவதாகவும் கூறினார்கள்.