காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை
காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், ஓட்டல் பார்கள் ஆகியவை இயங்காது. காந்தி ஜெயந்தியையொட்டி அன்றைய தினம் விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.