ஈரோட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது
ஈரோட்டில் தக்காளி விலை மேலும் குறைந்தது
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் நடக்கிறது. அங்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.170 வரை விற்பனையானது. அதன்பிறகு வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளியின் விலையும் படிபடியாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் விலை குறைந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.