தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

கேரளா, வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்வ தால் கோவையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-07-31 20:15 GMT


கேரளா, வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்வ தால் கோவையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தக்காளி விலை உயர்வு


நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து உள்ளது. கோவை மாவட்டத்துக்கு நாச்சிப்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்ப னை செய்யப்பட்டது. இந்தநிலையில் கோவையில் மீண்டும் விலை உயர்ந்து நேற்று கிலோ ரூ.150-க்கு தக்காளி விற்பனை செய் யப்பட்டது. ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை செய் யப்பட்டது.


கொள்முதல் அதிகரிப்பு


தக்காளி விலை தொடர்ந்து உயர்வது குறித்து டி.கே. மார்க்கெட் வியாபாரி அப்பாஸ் கூறுகையில், கேரள மாநிலம், திருச்சி உள் ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்துக்கு தக்காளி கொள்முதல் செய்வது அதிகரித்து உள்ளது.

இதனால் கூடைக்கு ரூ.500 வரை விலை அதிகரிக்கிறது.

தக்காளி விளைச்சல் அதிகரித்தால் வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது.தக்காளி விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாங்கும் அளவை குறைத்து உள்ளனர் என்றார்.


மேலும் செய்திகள்