தொல்காப்பியர் சிலைக்கு அரசு சார்பில் மாலை
பிறந்த நாளையொட்டி தொல்காப்பியர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில்,
தொல்காப்பியம் நூலினை இயற்றிய ஆசான் தொல்காப்பியருக்கு நேற்று 2734-வது பிறந்தநாள் ஆகும். தொல்காப்பியர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பிறந்தநாளையொட்டி விளவங்கோடு தாலுகா காப்புக்காட்டில் அமைந்துள்ள தொல்காப்பியர் சிலைக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் அரசு சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் விளவங்கோடு தாசில்தார் குமாரவேல், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் கனகலட்சுமி, தொல்காப்பியர் அறக்கட்டளை தலைவர் சுந்தரராசன், பொருளாளர் பாஸ்கரன், செயலாளர் சஜீவ், டாக்டர் விஜயகுமார், சீனிவாசன், பொன்னுலிங்கம், முளங்குழி லாசர், எல்லைக் காவலர் கோவிந்தநாதன், தொல்காப்பியர் அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர்.