செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வானிலை அறிக்கையின்படி இன்று (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Update: 2023-11-25 00:18 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வானிலை அறிக்கையின்படி இன்று (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செயல்படாது எனவும், எந்த வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்