கடலூரில் வெளுத்துவாங்கிய கனமழை - வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; புகைப்பட தொகுப்பு
கடலூரில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.;
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. பெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் நேற்று முன் தினம் இரவு மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.
இந்த பெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக, கடலூரில் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடலூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை காண்போம்:-