விழப்பள்ளத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

விழப்பள்ளத்தில் இன்று மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.

Update: 2023-10-10 18:58 GMT

அரியலூர் மாவட்டம் பிராஞ்சேரி அருகே விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பெறும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளார். எனவே விழப்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்