தமிழகத்தில் இன்று 13 இடங்களில் சதமடித்த வெயில்..!

தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

Update: 2023-05-20 14:20 GMT

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய நிலையில், சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி - 106, வேலூர் - 105, திருத்தணி மற்றும் ஈரோடு தலா 104, திருச்சி, மதுரை, மதுரை விமான நிலையம் தலா 103, சென்னை மீனம்பாக்கம் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்