புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

Update: 2023-05-31 19:46 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சமத்துவபுரம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தியாகதுருகத்தில் இருந்து விருகாவூர் நோக்கி சென்ற காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.66 ஆயிரத்து 600 மதிப்புள்ள தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பதும், புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கணேசனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 56 கிலோ 700 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்