புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-28 19:05 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் உள்ள சோதனைச் சாவடியில் மணலூர்பேட்டை போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி படைவீட்டு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் விஜய்பாபு (வயது 45) என்பவர் பெங்களூருவில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து விஜய்பாபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்