வடகாடு அருகேயுள்ள ஆவணம் கைக்காட்டி பகுதியில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பவளத்தாள்புரம் பகுதியை சேர்ந்த குருநாதன் (45) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1,600 மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.