புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

ஊட்டி அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-17 20:00 GMT

ஊட்டி

ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் போலீசார் தேவர்சோலை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 5¾ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊட்டி சுற்று வட்டார பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்