புகையிலை விற்றவர் கைது

புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-16 19:00 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தன. அதன்பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் (வயது 55) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரவீந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்