புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர் .

Update: 2023-07-16 18:28 GMT

வாங்கல் அருகே உள்ள செம்மடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கிருஷ்ணகிரியை சேர்ந்த பழனி (வயது 25) என்பவர் விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்