கடைகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே கடைகளில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-25 19:36 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மணக்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கிரண்குமார் (வயது 22) என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில் அவரது தந்தையான செல்வம் மற்றும் எம்.குன்னத்தூரை சேர்ந்த யுவராஜ் (36) ஆகியோரின் கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கிரண்குமார், செல்வம், யுவராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்