விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது பெட்டிக்கடைகளுக்கு சீல் வைப்பு
விழுப்புரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா். மேலும் பெட்டிக்கடைகளுக்கு சீல் வைக்கப்ப்ட்டது.
விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை மற்றும் சிந்தாமணி, பில்லூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் நடுமுத்தாம்பாளையத்தை சேர்ந்த குமாரி (வயது 35), சிந்தாமணியை சேர்ந்த முருகன் (47), பில்லூர் சதாசிவம் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 210 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 3 பெட்டிக்கடைகளையும் போலீசார் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.