இறைச்சி கடை உரிமையாளருக்கு சராமாரி அரிவாள் வெட்டு

கயத்தாறில் இறைச்சி கடை உரிமையாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் இறைச்சி கடை உரிமையாளரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இறைச்சி கடை உரிமையாளர்

கயத்தாறில் தெற்கு சுப்ரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருபவர் ரஞ்சித் (வயது 40). இவர் நேற்றுமுன்தினம் மாலை 4 மணியளவில் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கணேசன், தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சேர்ந்த இசக்கி, முருகன் ஆகிய மூன்று பேரும் தூங்கி கொண்டிருந்த ரஞ்சித்தை எழுப்பியுள்ளார்.

அரிவாள் வெட்டு

கண்விழித்து பார்த்த அவரை திடீரென்று 3 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரது அலறள் சத்தம் கேட்டு, ஓடிவந்த தாயார் லலிதா கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த 3 பேரும் ரஞ்சித்தை ரத்தவெள்ளத்தில் கீழே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்தபுகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்தை மீட்டு 108 ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேர் சிக்கினர்

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்று கொண்டிருந்த கணேசன், இசக்கி, முருகன் ஆகிய 3 பேரையும் வாகனத்தில் துரத்தி சென்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 3 பேரும் கோவில்பட்டி ஜே.எம்.2. கோர்ட்டில் ஆஜர்செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்