பேரையூர் அருகே ஓட்டி வந்த மாட்டு வண்டிக்கே உயிரை கொடுத்த விவசாயி -மாடுகள் மிரண்டதால் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கினார்

ஓட்டி வந்த மாட்டு வண்டிக்கே விவசாயி உயிரைக்கொடுத்த சோக சம்பவம் நடந்துள்ளது. மாடுகள் மிரண்டதால் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

Update: 2023-05-08 20:40 GMT

பேரையூர்,

ஓட்டி வந்த மாட்டு வண்டிக்கே விவசாயி உயிரைக்கொடுத்த சோக சம்பவம் நடந்துள்ளது. மாடுகள் மிரண்டதால் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

விவசாயி

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 28). விவசாயி.

இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து தனது மாட்டு வண்டியில் தோட்டத்து வேலைக்காக சென்றார்.

புதிய மாடுகளை பூட்டி வண்டியை அவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு ஓடை அருகே மாட்டு வண்டி சென்றபோது, மாடுகள் திடீரென மிரண்டு ஓடின. இதனால் மாட்டு வண்டியில் இருந்து பொன்ராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தலை நசுங்கி பலி

கண் இமைக்கும் நேரத்தில், அதே மாட்டு வண்டியின் டயர் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அக்கம்பக்கத்து விவசாயிகள் சாப்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பொன்ராஜ் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்