ரேஷன் அரிசி, நெல் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
ரேஷன் அரிசி, நெல் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
ரேஷன் அரிசி, நெல் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விலையில்லா ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு கேரளாவில் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேனகா தலைமையில் போலீசார் தமிழக -கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நெல் கடத்தலா?
கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், வாளையாறு உள்ளிட்ட இடங்களில் போலீசார் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக ரேஷன் அரிசி, பொது வினியோக திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் நெல் ஆகியவை கடத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், பொன்ஞானசேகரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.