மேகதாதுவில் அணை கட்ட மத்தியஅரசு அனுமதிக்காது: பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி

மேகதாதுவில் அணை கட்ட மத்தியஅரசு அனுமதிக்காது என்று பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி உமாரதிராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்திற்கு நேற்று மாநில மகளிரணி தலைவி உமா ரதிராஜன் கருப்பு உடை அணிந்து வந்தார். அவரை மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து வரவேற்றனர். பின்னர் மாநில மகளிரணி தலைவி கூறுகையில், 2017-ல் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசின் அனுமதியில்லாமல் காவிரி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வெளிப்படையாக அறிவித்தார். இ்ப்போது அங்கு ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் மேகதாதுவில் அணை கட்ட போவதாக அறிவித்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 1970 ஆண்டுகளில் காவிரியில் 4 அணைகள் கட்டியபோது, கருணாநிதி எப்படி மவுனம் சாதித்தாரோ, அதே போலவே அவரது மகனான ஸ்டாலின் கண் மூடி மவுனம் சாதித்து வருகிறார். காவிரி நதிநீர் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்காமல், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடகா சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் கருப்பு உடை அணிந்துள்ளோம். அதேசமயம் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது என்பதை உறுதியாக சொல்கிறோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்