எட்டயபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு
எட்டயபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் 1½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
எட்டயபுரம்:
கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் அசோக் (வயது 24). கட்டிட ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழியுடன் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி பகுதியில் வந்த போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள், அசோக் மீது மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு காட்டுப்பகுதி வழியாக தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.