அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது - நாசா குறித்த தகவல்கள் பகிர்வு

அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நாசா குறித்த தகவல்கள் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.

Update: 2022-11-26 12:08 GMT

சென்னை,

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவர் டுவிட்டர், பேஸ்புக் உள்பட சமூகவலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டன.

அமைச்சரின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில் நாசா தொடர்பான தகவல்களை டுவிட் செய்துள்ளனர்.

தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக பேஸ்புக்கில் அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட பதிவில், எனது ட்விட்டர் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குழு எனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ட்விட்டர் பக்கம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டவுடன் அது குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Full View


Tags:    

மேலும் செய்திகள்